தமிழக பெண்கள் இயக்கம்

தமிழக பெண்கள் இயக்கம் ஏன்? எதற்கு ?

கீழடி நாயகி. கனிமொழி மதி
தலைவர்

அனைவருக்கும் வணக்கம்.

ஒரு சமுகம் சமநிலைச் சமூகமாக மாற வேண்டுமெனில் பெண்களின் தன்மேம்பாடு (Women empowerment) என்பது மிகவும் அடிப்படையானது. அவ்வகையில் அனைத்து பெண்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை நோக்கி இருபாலரையும் இணைத்து, செயல்திட்டங்களை அமைத்து களப்பணிகளை தமிழக பெண்கள் இயக்கம் செயல்படுத்துகிறது.

சங்க அலுவலகம்:

 

  “ரோஹித் டவர்” TNSC வங்கியின் பிரதான வாயிலுக்குப் பக்கத்தில்

 

  எண். 127/261, 3வது மாடி, அங்கப்ப நாயக்கர் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை – 600001.

சமாவட்ட பதிவாளர் வரம்பு:

மாவட்ட பதிவாளர், சென்னை வடக்கு, சென்னை.

சங்க அலுவலக நேரம்:

காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

 

சங்க வங்கி கணக்கு விவரம் :

Account Number:-
THAMIZHAGA PENGAL IYAKKAM CANARA BANK
BRANCH- CHENNAI PERIYAR NAGAR ACCOUNT NUMBER.8541201000288 IFSC code.CNRB0008541
 

தமிழக பெண்கள் இயக்கம் ஏன்? எதற்கு ?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா மற்றும் உலகம் முழுவதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்ட வரையறை வகுக்கப்பட்டுள்ள போதும், பெண்கள் அரசியலிலும் ஆளும் பொறுப்புகளிலும் சம அளவில் இல்லாமல் இருப்பது தான் உண்மை.

தமிழர்கள் அடிப்படையில் முற்போக்கு சிந்தனை மற்றும் சமத்துவ மனப்பான்மை உடையவர்கள் என்பதை சங்க இலக்கியங்களில் இருந்தும், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளில் இருந்தும், இயற்கைக்கு நன்றி செலுத்தி வழிபடும் மூடநம்பிக்கையற்ற வழிபாட்டு முறையைக் கொண்டு இருந்தார்கள் என்பதிலிருந்தும் அறியலாம்.

வரலாற்றின் இடைக்கால கட்டத்தில், தொடர் படையெடுப்புகளுக்கு ள்ளாகி, ஆட்சி அரசியல் அதிகாரத்தை இழந்தாலும், தமிழர்கள், ஒரே மொழி, ஒப்பற்ற இலக்கியங்கள், ஒரே வகையான உணவு, உடை ,வாழ்வியல் கோட்பாட்டு நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்கள் என்று ஒரு தேசிய இனமாக நிலைத்தனர், தொடர்கின்றனர்.

அடிப்படையில் பொய்மைகள் இன்றி வாழ்ந்த இனம் என்பதால், நவீன காலத்தில் மார்க்சிய, அம்பேத்காரிய, பெரியாரிய சிந்தனைகளை உள்வாங்கி தமிழ்நாடு பல புரிதல்களில் முற்போக்கு மாநிலமாகத் திகழ்கிறது.

பெண் விடுதலை, தந்தை பெரியாரால் ஆணித்தனமாக பேசப்பட்டது. இருந்த போதிலும், அரசியல் அதிகாரத்திலும் தொழில்துறைகளிலும் சமூக உரிமை அமைப்புக்களிலும் பெண்களுக்கான உரிய இடம் இல்லாத நிலையே தொடர்கிறது. தந்தை பெரியாரால் உரிவாக்கப்பட்ட அமைப்புக்களிலும், அவரின் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களிலும் கூட பெண்களுக்கான உரிய இடம் அளிக்கப்படவில்லை. எனவே, பெண்களே தலைமையேற்று வழி நடத்தும் தனிப்பெரும் இயக்கத்திற்கான கட்டாயத்தை இந்நிலை உணர்த்துகிறது, அதற்கான தக்க தருணமும் இதுவே.

ஏனெனில்,

1) 150 கோடி மக்களை பிரதிநிதிப்படுத்தும் 542 பேர் கொண்ட இந்திய பாராளுமன்றத்தில் 75 கோடி பெண்களில் 78 பேர் மட்டுமே உள்ளனர்.

2) சமூக நீதி நிலம் என்று பெருமை கொள்ளும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்களில் வெறும் 12 பேர் மட்டுமே பெண்கள்.

3)உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் தலைவர்கள் பொறுப்புகளில் இருந்தாலும் ( Defacto) அவர்களது கணவர் அல்லது மகன்கள் ( Dejure) தலைவர் பணிகளை பார்க்கும் மோசமான சூழல்தான் இன்றளவும் உள்ளது.


4. 30% இட ஒதுக்கீட்டு சட்டம் 30 ஆண்டுகள் கிடப்பில் வைக்கப்பட்டு இப்பொழுது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது எனினும் அமலாக்கம் கேள்விக்குறியே.

5. ஆண்களை மிஞ்சும் அளவில் பெண்கள் கல்வி மற்றும் திறமை அளவுகோள்களில் வளர்ந்து வருவதாலும், “2கே கிட்ஸ்” என்று கூறப்படும் நவீன தலைமுறை குழந்தைகளில் பெண்கள் 90 சதவீதம் பேர் வேலைக்குச் செல்லும் நிலை இருப்பதால், வேலைக்கு அல்லது தொழில் முனைவிற்குச் செல்லும் நேரங்களில் அவர்களின் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தக்க ஏற்பாடு செய்வது மிக முக்கிய பொறுப்பு. அதற்கான அரசின் கொள்கை முடிவும் சரியான ஏற்ப்பாடுகள் செய்வதும் மிகவும் அவசியம், முக்கியம்.

6. 100% உடல் பாதுகாப்பு மற்றும் உளவியல் பாதுகாப்பிற்கான மற்றும் உத்தரவாதத்திற்கான தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்குதல் வேண்டும்.

7.குடும்பச் சிக்கல்களின் காரணமாக கணவரை விட்டுப் பிரிய நேர்ந்த பெண்கள், திருமண பந்தத்தால் பிறந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கான பராமரிப்புத் தொகை கணவரிடம் இருந்து உரிய நேரத்தில் கிடைக்காமல் நீதிமன்றங்களுக்கு சென்று அலைகலைக்கப்பட்டு அவதிஉறும் நிலை சீரமைக்கப்பட வேண்டும்.

8. ஆணும் பெண்ணும் சமயல் மற்றும் வீட்டுவேலைகளை சம்மாக பகிர்ந்து செய்தல்நிலை சமூகத்தில் ஏற்பட செய்ய வேண்டும்.

9.பெண்களுக்கான ஊதியமும், ஆண்களுக்கான ஊதியமும் சமம் என்ற நிலைக்கு அனைத்து துறைகளும் இருக்க செய்ய வேண்டும்.

10. அடித்தட்டு வர்கத்திற்கு குறிப்பாக பட்டியலின மக்களுக்கு தரமான கல்வி கிடைக்காமையால் மாறாத சமூக ஏற்றத்தாழ்வு நிலை சீரமைக்கப்படவேண்டும்.

11. அனைத்து அரசு ஒப்பந்தவேலைகளிலும் 40% வரை இலஞ்சம் அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டே ஆகவேண்டுமென்ற அவல நிலைகள் சரிசெய்யப்படவேண்டும்.

12. மற்ற அனைத்து துறைகளிலும் சர்வசாதாரமாக ஆகிவிட்ட இலஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட்டு மக்களுக்கான, குறிப்பாய் ஏழை நடுத்தர மக்களுக்கான அரசினால் ஏற்படுத்தி தரவேண்டிய வாழ்க்கை வசதிமுறை அதிகாரிகளால் ஊறு செய்யப்படாமலும், எளிதாகவும் கிடைக்கும் திட்டங்கள் வகுக்கப்பட மற்றும் நடைமுறைபடுத்தப்படவேண்டும்.

எனவே,

பெண்களுக்காக மட்டுமல்லாது சமூகத்தின் அனைத்து அவலங்களையும் களைய பெண்களே செயல்படவேண்டும்.

பெண்களுக்கான உரிமைகளுக்காக பெண்களே புரட்சி கையில் எடுக்க வேண்டும். பெண்களுக்காக எவரேனும் போராடுவார்கள் என்று நினைத்தால் பெண்கள் இன்று போல்
என்றுமே அடிமைகளாகத் தான் வாழவேண்டும்.

சமூகப் பொருளாதார முன்னேற்றத்திலும், அரசியல் நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சம பங்கு பெற்றிடவும், அதற்குரிய பெண் ஆளுமைகளை உருவாக்கிடவும் “தமிழக பெண்கள் இயக்கம்” உதயமாகிறது

வ.எண்        உறுப்பினர்களின் பெயர்

முகவரி

      தொழில்     சங்கத்தில் வகிக்கும் பதவி

1

கனிமொழி மதி

“ரோஹித் டவர்” TNSC வங்கியின் பிரதான வாயிலுக்குப் பக்கத்தில்

எண். 127/261, அங்கப்ப நாயக்கர் தெரு,

 ஜார்ஜ் டவுன், சென்னை – 600001

வழக்கறிஞர்

தலைவர்

1

வாசுகி

“ரோஹித் டவர்” TNSC வங்கியின் பிரதான வாயிலுக்குப் பக்கத்தில்

எண். 127/261, அங்கப்ப நாயக்கர் தெரு,

 ஜார்ஜ் டவுன், சென்னை – 600001

         வழக்கறிஞர்             

துணைதலைவர்

முகவரி

முகவரி:     “ரோஹித் டவர்” TNSC வங்கியின் பிரதான வாயிலுக்குப் பக்கத்தில்

எண். 127/261, அங்கப்ப நாயக்கர் தெரு,

 ஜார்ஜ் டவுன், சென்னை – 600001