தமிழக பெண்கள் இயக்கம்

நமது நோக்கங்கள்

பெண்களுக்கு உடல் உளவியல் மற்றும், பொருளாதார ரீதியான, முழுபாதுகாப்பு குறைந்தபட்சம் உறுதிசெய்யபட வேண்டுமானால் அவர்கள் (50%) ஐம்பது விழுக்காடு அரசியல் மற்றும் அனைத்து துறைகளிலும் இடம் பெறுதல் வேண்டும் என்ற நோக்கில் “தமிழகப் பெண்கள் இயக்கம்” நிறுவப்படுகிறது.

பெண் சமூகம் அறிவார்ந்த மற்றும் தெளிந்த சிந்தனையோடு வாழ வித்திடுதல் என்பதே ஒரு சமூகம் முழுமையான முன்னேற்றப் பாதையிலும் வளர்ச்சியிலும் உள்ளது என்பதைக் குறிக்கும் குறியீடாக அமையும். அவர்களுக்கான உடல் சார்ந்த பாதுகாப்பு என்பது அவர்களுக்கான தார்மீக உரிமை.

எனவே அவர்களின் உடல் சார்ந்த பாதுகாப்பும் பொருளாதார தற்சார்பும் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு அவர்களின் மீதான சுய மதிப்பீடும் தன்னம்பிக்கையும் வளர வழி செய்யும் எண்ணத்திற்கு பின்வரும் திட்டங்களை தமிழகப் பெண்கள் இயக்கம் கட்டமைக்கிறது.

சமூகத்தில் பெண்களின் முன்னேற்றதிற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளல்

அரசியல் மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை பெரும்பான்மையானதாக்கி வலுப்பெறுவதற்கு தேவையான அடிப்படைக்கட்டமைப்புகளை சமூகத்தில் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்.

சட்டவிழிப்புணர்வு பெற இருபாலருக்கும் சட்ட முகாம்களை தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்துதல்

பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காக இருபாலரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படும் வகையில் சமூகக்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டங்களை வகுத்து அமல்படுத்துதல்.

பெண்கள் பொருளாதார தற்சார்புடனும், சுயமதிப்பீட்டு அளவுகோல்களை சரிவர புரிந்து தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளல்.

பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் உடல் சார்ந்த பாதுகாப்புடன் வாழத் தேவையான சமூக ஒழுங்குகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்தல்.

அனைத்து பெண்குழந்தைகளும் கல்லூரி படிப்பு வரை கல்வி கற்றலை உறுதி செய்தல், மற்றும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வழிவகை செய்தல்.

பெண் குழந்தைகளும், பெண்களும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகமல் தங்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுடன் வாழுவதற்கான முயற்சிகளை செய்தல்.

பெண்கள் நாட்டு நடப்பையும் அரசியலையும் அறிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவித்தல், அறிவரங்குகள் நடத்துதல், அறிவார்ந்த புத்தகங்கள் மற்றும் ஆக்கங்களை படிக்க வழி செய்ய அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்குதல்.

முகவரி

முகவரி:     “ரோஹித் டவர்” TNSC வங்கியின் பிரதான வாயிலுக்குப் பக்கத்தில்

எண். 127/261, அங்கப்ப நாயக்கர் தெரு,

 ஜார்ஜ் டவுன், சென்னை – 600001